29 பேருடன் மாயமான ஏஎன் 32 விமானம்
தேடும் பணி இரவிலும் தொடரும்
பாதுகாப்புத்துறை தகவல்
சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பாம்ரே தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த விமானத்தில், 3 கடற்படை, 3 விமானப்படை, ஒரு கடலோர காவல்படை அதிகாரி மற்றும், அந்தமானை சேர்ந்த விமானப்படை அலுவலர்கள் இரண்டு பேர் 2, கடற்படையை சேர்ந்த 8 வீரர்கள் உட்பட 29 பேர் இருந்துள்ளனர்.
ஏ.என்.
32 ரக விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. இந்த, விமானம் காலை 11.30 மணிக்கு போர்ட் பிளேர் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் கிளம்பிய சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு அற்று போனது. இதனையடுத்து அதிகாரிகள் பதட்டமடைந்தனர். விமானத்தில் 4 மணி நேரம் மட்டுமே பயணிக்கும் அளவுக்கு எரிபொருள் இருப்பதாக தெரிகிறது. விமானம் எங்கே சென்றது. விபத்தில் ஏதும் சிக்கியிருக்கிறதா என்ற கோணத்தில் தேடப்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றும், முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விமானத்தில் சென்ற 29 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பாம்ரே கூறியுள்ளார். மேலும், மிகப்பெரிய அளவில் தேடுதல் மற்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விமானத்தை தேடும் பணியானது இரவிலும் தொடரும். சென்னையில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் மாயமாகி உள்ளது. விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது, என்று கூறிஉள்ளார். தேடுதலில் அதி நவீன விமானம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி விமானப்படை தளத்தை சேர்ந்த இரண்டு அதிநவீன விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment