புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின்
ஆசையை நிறைவேற்றிய தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கும் தனுஷ் பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தியின் ஆசையை நிறைவேற்றி, அவளை சந்தோஷப்படுத்தியுள்ளார் .
அந்த சிறுமியின் பெயர் கோட்டீஸ்வரி. 12 வயதான அந்த சிறுமி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனுஷின் தீவிர ரசிகையான கோட்டீஸ்வரிக்கு நீண்டநாட்களாக தனுஷை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசை. இதனை தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தனுஷின் காதுக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த தனுஷ், சம்பந்தப்பட்ட சிறுமியை நேரில் சென்று சந்தித்துள்ளார். தனுஷை பார்த்ததும் உற்சாகம் அடைந்த சிறுமி, தனுஷை கட்டியணைத்துக் கொண்டார். பின்னர், அரை மணி நேரம் அந்த சிறுமியிடம் உரையாடிவிட்டு, அவளுடன் புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார் தனுஷ்.
0 comments:
Post a Comment