ஐ.நா.,வின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?
6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி
ஐ.நா.,வின்
அடுத்த பொதுச்
செயலர் பதவிக்கு
பல்வேறு நாடுகளை
சேர்ந்த 12 பேர் போட்டியிடுகின்றனர். பொதுச்செயலரை தேர்ந்தெடுப்பதற்கான
ரகசிய வாக்குப்
பதிவு, நேற்று நடைபெற்றது.
ஐ.நா., பொதுச்
செயலர் பான்
கி-மூனின்
பதவிக் காலம்
இந்த ஆண்டுடன்
முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த பொதுச் செயலர்
பதவிக்கு பல்வேறு
நாடுகளை சேர்ந்த
12 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் அடுத்த
பொதுச் செயலரைத்
தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்குப்
பதிவு, நேற்று
நடைபெற்றது. இதில் அடுத்த செயலரை 193 உறுப்பினர்களைக்
கொண்ட பொதுக்
குழு தேர்ந்தெடுக்கும்.
விதிமுறைகளில்
இல்லாவிட்டாலும், உலகின் அனைத்துப் பிராந்தியத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், சுழற்சி முறையில்
ஒவ்வொரு பிராந்தியத்தைச்
சேர்ந்தவரும் பொதுச் செயலராக நியமிக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
அந்த
வகையில், ஆசியா,
ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்
சுழற்சி முறையில்
ஐ.நா.வின் தலைமைப்
பொறுப்பை வகித்துள்ளனர்.
இந்தச்
சூழலில், பான்
கி-மூனுக்கு
அடுத்ததாக தங்கள்
நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான்
அடுத்த பொதுச்
செயலராக வேண்டும்
என்று ரஷ்யா
உள்ளிட்ட கிழக்கு
ஐரோப்பிய நாடுகள்
வலியுறுத்தி வருகின்றன.
இதுவரை
ஒரு பெண்
பொதுச் செயலர்
கூட நியமிக்கப்பட்டதில்லை
என்பதால், ஒரு
பெண்தான் அடுத்த
பொதுச் செயலராகத்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று
56 உறுப்பு நாடுகள் வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டு
வருகின்றன.
போட்டியாளர்களில்
எட்டு பேர்
கிழக்கு ஐரோப்பாவைச்
சேர்ந்தவர்கள். இருவர் தென் அமெரிக்காவையும், ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள்.
மேலும் போட்டியாளர்களில்
6 பேர் பெண்கள்
ஆவர். இதுவரை
ஐ.நா.,
பொதுச்செயலாளராக பெண் ஒருவர் பதவி வகிக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment