சாய்ந்தமருது தோணாவில் 3 கோடி ரூபாவில்

செய்கை பண்ணப்பட்டிருக்கும்

ஆற்று வாழைகளை அறுவடை செய்வதற்காகவா

மீண்டும் 10 கோடி ரூபா ஒதுக்கீடு!

மக்கள் கேள்வி

சாய்ந்தமருது தோணாவில் 3 கோடி ரூபா செலவிடப்பட்டு அபிவிருத்தி எனக் கூறி ஆற்று வாழைகளை செழிப்பாக வளருவதற்கு ஏற்பாடுகளை செய்தது போன்று தோணா அபிவிருத்தியைச் செய்து விட்டு தற்போது பசுமையாக வளர்ந்திருக்கும் ஆற்று வாழைகளை அறுவடை செய்வதற்காகவா மீண்டும் 10 கோடி ரூபா பண ஒதுக்கீடு என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
3 கோடி ரூபா செலவிடப்பட்டு (இத் தொகைதான் தோணா அபிவிருத்தி தொடர்பாக நடப்பட்ட நினைவுப் பலகையில் மக்களுக்கு காட்டப்பட்டிருந்தது) சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி செய்வதாகக் காட்டி அதிலிருந்த சல்வீனியா மற்றும் புல் பூண்டுகளை (தொழிலாளர்களைக் கொண்டு கையினால் நாள் சம்பளத்திற்கு அகற்றியிருக்க முடியும்) பாரிய இயந்திரத்தைக் கொண்டும் லாரிகளைப் பாவித்தும்  பல நாட்களைக் கடத்திய நிலையில் அகற்றி விட்டு தற்போது  தோணாவில் ஆற்று வாழை செய்து விட்டு சென்றிருப்பது போன்று காட்சி தருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
3 கோடி ரூபா செலவிடப்பட்டு சாய்ந்தமருது தோணாவில் செய்கை பண்ணப்பட்டிருக்கும் ஆற்று வாழைகளை அறுவடை செய்வதற்காகவா? கல்முனை அபிவிருத்திக்குள்  சாய்ந்தமருது தோணாவுக்கு மட்டும் தனியாக 10 கோடி ஒதுக்கி இருப்பது என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது வரை சாய்ந்தமருது தோணாவில் முன்னாள் பிரதி அமைச்சர் எஸ். நிஜாமுதீன் அவர்களால் சுமார் 5 இலட்சம் ரூபா செலவிடப்பட்டு புல்,பூண்டுகள் அகற்றப்பட்டது. கல்முனை மாநகர சபையால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாய்களும் இவ்வாறே செலவிடப்பட்டன. இதன் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில்  30 மில்லியன் ரூபா (3 கோடி ரூபா) செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவ்வாறு, ஒரு முறையான திட்டமிடல் இன்றி இடம்பெறும் இதன் சுத்திகரிப்பு பணிகள் மூலம், அரசியல் வாதிகள் மக்கள் வரிப்பணத்தை காலா காலமாக வீணடித்து வருகின்றனர் என புத்திஜீவிகளால் கவலை வெளியிடப்படுகின்றது.
சாய்ந்தமருது தோணா 30 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவிருப்பதாகக் கூறியே கடந்த ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதற்கட்ட அபிவிருத்தி வேலைகளை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
இவ்வேலைத் திட்டத்தை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் இத்திட்டம் இரண்டு மாதங்களுக்குள் முடிவுறும் எனவும் மக்களுக்கு அவ்விடத்தில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தோணா அபிவிருத்தியின் முதற் கட்டமாக தோணாவை அகழ்வு செய்து மற்றும் துப்பரவாக்குவது என்றும் .அதன் பின்னர் பாதுகாப்புச் சுவர்கள் தோணாவின் இருமருங்கிலும் கட்டப்படும். அத்துடன் கடல் நீரை தோணாவுக்குள் செலுத்துவதற்கும் தோணாவிலிருந்து நீரை கடலுக்குள் செலுத்துவதற்குமாக மூடித் திறக்கக் கூடிய பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்து எனத் தெரிவிக்கப்ப்ட்டிருந்தது.
இதன் பின்னர் முகத்துவாரத்திற்கும் வைத்தியசாலை வீதிக்கும் இடைப்பட்ட தோணாவின் பகுதி படகுகள் தரிப்பு நிலையமாகவும் பாரிய வர்த்தக வலயமாகவும் பொழுது போக்கிடமாகவும் மாற்றப்படும் என்றும்
வைத்தியசாலை வீதியிலிருந்து மாளிகைக்காடுவரை தோணாவின் இருமருங்கிலும் நடைபாதைகள அமைக்கப்பட்டு  பூ மரங்கள், ஆசனங்கள்,குடிநீர் வசதிகள், குப்பை போடும் வசதிகள் என்பனவற்றோடு ஒரு நீண்ட பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
2015.05.01ம் திகதி மௌலவி SLM ஹனிபா அவர்களின் அழைப்பின் பேரில் குழு உறுப்பினர்கள் சாய்ந்தமருது பி.செயலகத்தில் கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களைச் சந்தித்தனர். .இச்சந்திப்பின் போது SLLRDC தலைவர், பிரதேச செயலாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் ஆகியோரும் சில ஊர்ப்பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர்;.இச்சந்திப்பின்போது அமைச்சர் அவர்கள் சாய்ந்தமருது தோணா அபிவிரத்தி திட்டத்திற்கு திறைசேரி 30 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளதாகவும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 11.05.2015 இல் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் பொறியியலாளர் ஒருவரின் தலைமையில் இங்கு காரியாலயம் ஒன்று அமையவிருப்பதாகவும் தேவையான இயந்திரங்கள் இங்கு நிறுத்திவைக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு SLLRDC தலைவருக்கும் பணிப்பாளருக்கும் பணிப்புரை வழங்கினார்.அச்சமயம் குழு உறுப்பினர்கள் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினர். பாதுகாப்புச்சுவர்கள் கட்டும்போது ஆழமாகவும் உறுதியாகவும் அத்திவாரம் இடல், தோணாவின் உயர்ந்த பகுதிகளிலிருந்து சல்வீனியா மற்றும் கழிவுப் பொருட்கள் நடுப்பகுதிக்கு வராது தடுப்பதற்கான ஏற்பாடுகள், சில வீடுகளிலிருந்து தோணாவுக்குள் கழிவு நீர் செல்வதைத் தடுக்க மாற்றொழுங்குகள், 03 பாலங்கள் நிர்மாணித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பாலங்கள் அமைப்பது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால். இத்திட்டங்கள் அனைத்தும் தேர்தல் காலத்தை மையமாக வைத்து மக்களுக்கு வழங்கப்பட்ட ஏமாற்றுக் கதைகளாகப் போய்விட்டது. ஏனெனில் மீண்டும் பல லட்சங்களை ஏப்பமிடத் சாய்ந்தமருது தோனா சல்வீனியா மற்றும் புல்,பூண்டுகளுடன் தயாராகிவிட்டது. சாய்தமருது தோணா மூலம் சில அரசியல்வாதிகளுக்கும் கொந்திராத்துக்காரர்களுக்கும் மீண்டும் யோகம் பிறந்துள்ளது. பாவம் அப்பாவி மக்கள்!
மக்களை காலத்திற்கு காலம் ஏமாற்றினாலும் நிச்சயமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வை ஒரு போதும் ஏமாற்றி விட முடியாது இதற்கான பிரதி பலனை இவ்வுலகத்தில் இல்லாவிட்டாலும்  நிரந்தரமான் மறு உலகத்தில் சம்மந்தப்பட்டவர்கள்  பெற்றேயாக வேண்டும்  என்றும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
- மக்கள் விருப்பம்








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top