ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில்14 பேர் பலி!

30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில்14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
சியட்டி மாவட்டத்தில் உள்ள கதிமியாவில் ஒரு நுழைவாயிலில் இன்று காலை ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான்.
இதில், 8 இராணுவ வீரர்கள், 2 காவலர்கள் ட்பட 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

எனினும், .எஸ். தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.  


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top