ஒலுவில் கடலரிப்புக்கு
தீர்வு வேண்டும்
ஒலுவில் மக்கள் அமைதிப் பேரணி
அம்பாறை
மாவட்டம் ஒலுவில்
பிரதேசத்தில் அண்மைக்காலமாக
ஏற்பட்டுவரும் கடலரிப்புக்கு உடனடி தீர்வு காணப்படல் வேண்டும் எனக்கோரி இன்று 29 ஆம் திகதி
வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்கு பின்
ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசலிருந்து அமைதிப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
ஒலுவில்
ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் ஊர் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதிப் பேரணியில் மீனவர்கள், கடலரிப்பினால் பாதிகப்பட்ட மக்கள்
மற்றும் அமைப்புக்கள, பொதுமக்கள் என
பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த அமைதிப் பேரணியின் போது........
’அரசே ஊரை காவு கொள்ளும் கடல் அரிப்பை நிறுத்து’,
’அரசே ஒலுவில் கிராமத்திற்கு நிரந்தர தீர்வை கொடு’,
‘அரசே அழகிய ஒலுவிலை அழிவில் இருந்து காப்பாற்று’,
’அரசே துறைமுக அபிவிருத்தியால் ஏற்பட்ட கடல் அரிப்பை நிறுத்து’
’அரசே இலங்கை தீவில் இருந்து ஒலுவில் ஒழிய வேண்டுமா’
‘அரசே ஒலுவில் மக்களின் கண்ணீரைத் துடை’,
’மீனவர் நிலங்களை மீட்டுத்தா’,
’வாழ்வாதாரத்தினை அழிக்கும் கடல் அரிப்பினை உடன் நிறுத்து’
என
பலகோசகங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் தங்களது அமைதியான
பேரணியை மேற்கொண்டனர்.
இதன்
பின்னர் குறித்த அமைதிப் பேரணியில்
கலந்து கொண்டவர்கள் அட்டாளைச்சேனை
பிரதேச செயலகத்திற்கு
அமைதியாக சென்று
ஜனாதிபதி, பிரதமர்,
அமைச்சர்களான ஹக்கீம், அர்ஜூன ரணதுங்க மற்றும்
மஹிந்த அமரவீர
ஆகியோருக்கான மகஜரினையும் பிரதேச செயலகத்தின் உதவிப்
பிரதேச செயலாளரிடம் கையளித்து
தங்களது பேரணிக்கான நோக்கத்தினையும் அவ்விடத்தில் எடுத்துரைத்தனர்.
0 comments:
Post a Comment