புதிதாக பள்ளிவாசல்கள் கட்ட வெளிநாட்டு பணம்
தடை விதிக்க பிரான்ஸ் பரிசீலனை

இமாம்கள், வெளிநாடுகளுக்கு சென்று, மத கல்வி பெறுவதற்கும் தடை


பிரான்ஸில், புதிதாக பள்ளிவாசல்கள் கட்ட வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு, தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து, அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸில், அடுத்தடுத்து மூன்று முறை பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. சமீபத்தில் நீஸ் நகரில், பயங்கரவாதி, மக்கள் கூட்டத்திற்குள், கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்று, 84 பேரை கொன்று குவித்தான்.
இதைத்தொடர்ந்து, அங்கு, கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்றுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் இருவர், பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். கொலையில் தொடர்புடைய நபரான, அதெல் கெர்மிஷே என்பவன், ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி விடுதலையானவன்.
அவனை பற்றி முன்கூட்டியே விசாரணை செய்யாததால், அவன், வெளியே வந்து பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளான். இதனால், பிரான்ஸ் அரசுக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ், இதுகுறித்து கூறியதாவது:
பிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பாதிரியாரை கொன்ற, .எஸ்., பயங்கரவாதி, முன் கூட்டியே கைதான நிலையில், அவனது பின்னணியை விசாரித்து இருக்கலாம்.

முன்னெச்சரிக்கையுடன் நடந்திருந்தால், இதுபோன்ற தாக்குதலை தவிர்த்து இருக்க முடியும். தற்போது, கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. பிரான்ஸில் புதிதாக பள்ளிவாசல்கள் கட்ட, வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு, தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. பிரான்ஸில் உள்ள இமாம்கள், வெளிநாடுகளுக்கு சென்று, மத கல்வி பெறுவதற்கும் தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top