முஸ்லிம் இராணுவ வீரரின் பெற்றோரை
கிண்டலடித்ததால் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்
அமெரிக்காவில்
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்,
உயிரிழந்த அமெரிக்க
முஸ்லிம் ராணுவ
வீரரின் பெற்றோரை,
கிண்டல் செய்த
சம்பவம், சர்ச்சையை
கிளப்பியுள்ளது.
அமெரிக்க
ஜனாதிபதி தேர்தலையொட்டி, ஜனநாயகக் கட்சி
வேட்பாளர் ஹிலாரி
கிளிண்டனுக்கு ஆதரவாக, ஈராக் போரில் பலியான
அமெரிக்க முஸ்லிம்
ராணுவ வீரர்,
ஹுமாயுனின் தந்தை பிரசாரம் செய்தார்.
அப்போது,
முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வரும் ஜனநாயகக்
கட்சி வேட்பாளர்
டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த அவர், 'போர்
தியாகிகளின் கல்லறைக்கு, டிரம்ப் செல்ல வேண்டும்;
அப்போது தான்,
அமெரிக்கா எத்தகைய
பன்முகத்தன்மை கொண்ட தியாகத்தால் உருவானது என்பது
புரியும்' என்றார்.
இந்த உரை,
அமெரிக்கர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதற்கு
பதிலளித்துள்ள டிரம்ப், ராணுவ வீரர் ஹுமாயுனின்
பெற்றோரை கிண்டல்
செய்துள்ளார். 'ஹுமாயுனின் தந்தை ஆற்றிய உரையை
எழுதிக்கொடுத்தது யார், ஹிலாரியா? ஹுமாயுனின் தந்தை
மட்டுமே பேசினார்.
அவரது மனைவி
அமைதியாக இருந்தது
ஏன்? பேச
அனுமதிக்கப்படவில்லையா' என்று கிண்டலாக
கேட்டார்.
டிரம்பின்
இந்த பதிலை,
இரு கட்சியினருமே
ரசிக்கவில்லை. அவருக்கு, சமூக வலைதளங்கள் மூலமாகவும்,
பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து,
டிரம்ப் வெளியிட்டுள்ள
மற்றொரு அறிக்கையில்,
'ராணுவ வீரர்
ஹுமாயுன், கதாநாயகர்'
என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment