ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால்
7 வருடங்கள் சிறைத்
தண்டனை வழங்கப்படும்
நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை..!
பாடசாலை
மாணவர்களை அடிப்பது
சட்டத்தின் பிரகாரம் குற்றமென குறிப்பிட்ட யாழ்.மேல் நீதிமன்ற
நீதிபதி எம்.இளஞ்செழியன், மாணவர்களை
அடிப்பதை உடன்
நிறுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில்
நடைபெற்ற பாடசாலையின்
அதிபர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையில்
பயிலும் மாணவர்களை
தாக்குவது அல்லது
வேலைத்தளங்களில் சிற்றூழியர்கள் மீது அதிகாரம் படைத்தவர்கள்
தாக்குதல் நடத்தினால்,
அது சித்திரவதை
குற்றமாகும் என்றும் அதற்கெதிராக மேல் நீதிமன்றில்
7 வருட சிறைத்தண்டனை
விதிக்கப்படும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் மேலும்
தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்
உச்ச நீதிமன்றில்
அடிப்படை உரிமை
மீறல் மனுத்
தாக்கல் செய்தால்,
தாக்குதல் நடத்தியவர்களின்
வேலையும் பறிபோய்
நட்டஈடும் செலுத்தவேண்டும்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment