ஆஸ்பத்திரியில் துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்
டாக்டரை சுட்டுக்கொன்றவர், தன்னையும் மாய்த்துக்கொண்டார்
ஜெர்மனியில்
பெர்லின் அருகே
ஸ்டெக்லிட்ஸ் நகரில் பெஞ்சமின் பிராங்கிளின் ஆஸ்பத்திரியில்
ஒரு மர்ம
நபர் நேற்று
புகுந்து, இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு,
ஒரு டாக்டர்
மீது சரமாரியாக
துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் வீழ்த்தினார்.
அதைத்
தொடர்ந்து தாக்குதல்
நடத்திய நபர்
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அங்கு
பெரும் பதற்றம்
நிலவியது.
படுகாயம்
அடைந்த டாக்டரை
தீவிர சிகிச்சை
பிரிவில் சேர்த்து,
தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்
பரிதாபமாக உயிரிழந்ததாக
'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த
தாக்குதலின் பின்னணி என்ன என்பது பற்றி
உடனடியாக தெரியவரவில்லை.
அதே
நேரத்தில் இந்த
தாக்குதலில் தீவிரவாத பின்னணி ஏதும் இருப்பதாக
தெரியவில்லை என கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய
நபர் முன்னாள்
நோயாளி என
சொல்லப்படுகிறது.
இந்த
தாக்குதல் நடந்த
ஆஸ்பத்திரி, சாரிட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கம் ஆகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.