தலைவர்கள் சிறை சென்ற பின்னர்தான்
நோயாளிகள் என தெரியவருகிறது.

-ரில்வின் சில்வா தெரிவிப்பு


சிறைக்கு சென்ற பின்னர்தான் நாட்டை புரட்டி போட முயற்சிக்கும் தலைவர்கள் நோயாளிகள் என தெரிவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடன்சுமை வரிச்சுமை மற்றும் வீழ்ச்சியடையும் பொருளாதாரம் என்ற தொனிப்பொருளில் கரந்தெனிய பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், உடல் நிலை சரியில்லை எனக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறான நோயாளிகள்தான் நாட்டை கவிழ்க்க முயற்சித்து வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாழடைந்து கிடப்பதால், கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை ஹம்பாந்தோட்டைக்கு அனுப்புமாறு மகிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்கும் பொருட்களை கொழும்புக்குக் கொண்டு வர மீண்டும் பணத்தை செலவிட வேண்டும்.
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிநாடுகளில் கடனை பெற்றிருந்த போதிலும் தொழிற்சாலைகள் எதனையும் ஏற்படுத்தவில்லை.

உற்பத்தியில்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top