அப்துல் கலாமின் வெண்கலச் சிலை திறப்பு
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினமான இன்று, ராமேஸ்வரத்தில் அவரது 7 அடி உயர வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்னும் இடத்தில், கலாமின் நினைவிடம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அங்கு நினைவிடத்துடன் கூடிய சிலை அமைக்கப்பட்டது.
அந்த சிலையை இன்று காலை இந்திய மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் தலைமையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்துல் கலாமின் நினைவிடத்திற்கான அடிக்கல்லை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாட்டினார்.
கலாமின் மூத்த சகோதரர் முத்து முஹம்மது மீரான் மரைக்காயர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி அரங்குகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு கலாமின் சிலைக்கு மரியாதை செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment