இறந்து 13 நாட்களுக்கு பிறகு
இன்று ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை!
உயிரிழந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை
செய்யப்பட்டது. சென்னையில் பொறியாளர் சுவாதி
கொலை வழக்கில்,
புழல் சிறையில்
அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை
செய்து கொண்டார்
சுப்ரீம்
கோர்ட் உத்தரவின்படி
டில்லி எய்ம்ஸ்
மருத்துவமனை டாக்டர்கள் 5 பேர் அடங்கிய குழு
இந்த பிரேத
பரிசோதனையை செய்து வருகிறது. சென்னை ராயப்பேட்டை
அரசு மருத்துவமனையில்
5 பேர் குழு
பிரேத பரிசோதனையை
செய்து வருகிறது.
தடயவியல் துறை
தலைவர் செல்லக்குமார்
தலைமையில் நடக்கும்
ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை, திருவள்ளூர்
குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி ஆய்வு
செய்து வருகிறார்.
ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடப்பதால் ராயப்பேட்டை
மருத்துவமனையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. ராம்குமார் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது.
இதேவேளை,ராம்குமாரின் உடலில் காயங்கள் உள்ளன எனவே பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அறிக்கை தேவை என்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் தந்தை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ராம்குமாரின் பிரேத பரிசோதனைக்கு வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சுதீர் குப்தா. இடம் : ராயப்பேட்டை அரசு மருத்துவமனை |
ராம்குமாரின் பிரேத பரிசோதனைக்கு வந்த மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி.. |
0 comments:
Post a Comment