பிரதமர் ரணில்விக்ரமசிங்கவை சந்தித்தார் சோனியா
2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் பொது நிகழ்ச்சி கலந்துகொண்டதாகவும் தகவல்
இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சோனியா, சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி வாராணசி சென்ற 69 வயதாகும் சோனியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதன்பிறகு ஓய்வில் இருந்த சோனியா, இன்றுதான் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோருடன் சோனியா சந்தித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment