3 கைகளுடன் அதிசய சிறுவன்

நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது.

இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான், தூங்கும் போது மிகவும் சிரமப்படுகிறான். அவனது 3-வது கை முதுகு தண்டு வடத்தில் இருந்து உருவாகியுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக தாயின் கருவில் இரட்டைக் குழந்தைகளாக உருவாகி அது முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இது போன்று கைகள் உருவாகின்றன என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற விபரீதங்கள் 1500-ல் ஒரு குழந்தைக்கு அரிதாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தேவையின்றி கூடுதலாக உருவாகியுள்ள அந்த கையை ஆபரேசன் மூலம் அகற்றுவது மிகவும் ஆபத்தானது. அதை அகற்றுவதன் மூலம் சிறுவனின் தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் பக்கவாதம் நோய் உருவாக பெருமளவில் வாய்ப்பு உள்ளது. எனவே அதை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


நேபாளத்தில் ஒரு பகுதி மக்கள் மத நம்பிக்கையில் மிகவும் ஈடுபாட்டுடன் திகழ்கின்றனர். கர்ப்பகாலத்தில் மருத்துவ சிகிச்சை, ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள அவர்களது மதகுருமார்கள் அனுமதிப்பதில்லை. அது போன்ற காரணங்களால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top