தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்வையிட
பிரதமர் மோடியின் வருகை தள்ளிவைப்பு!
இதுதான் காரணமாம்
‘‘முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக பார்க்கும்
வகையிலான ஏற்பாடுகள் செய்த பின்னர், பிரதமர் மோடி அப்போலோ வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மற்றவர்களைப்போல மருத்துவர்களிடம் மட்டும் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு
பிரதமர் செல்வது முறையல்ல’என பிரதமர் மோடியின் வருகை தள்ளிவைப்புக்கு
காரணம் கூறப்பட்டுள்ளது.
முதல்வர்
ஜெயலலிதா செப்டம்பர்
22-ம் தேதி
சென்னை அப்போலோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அன்று
முதல் அனைத்து
கட்சி தலைவர்களும்
அப்போலோ சென்று
சிகிச்சை அளிக்கும்
மருத்துவக் குழுவினரிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து
விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூரில்
நடந்த பி.ஜே.பி மாநில செயற்குழுக்
கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன்,
‘‘முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி
ஆர்வத்துடன் இருக்கிறார்’’ என்று கடந்த 16-ம்
திகதி பேசினார்.
அ.தி.மு.க நிர்வாகிகளிடமும் இந்த தகவல் சொல்லப்பட்டது. அதற்கு,
பிரதமர் மோடி
இப்போதைக்கு அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை பார்க்க
வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.
அதற்கான
காரணங்கள் இதுதான் என மருத்துமனை
வட்டாரங்களில்தெரிவிக்கப்பட்டுள்ளது,
. ‘‘லண்டன், டெல்லி எய்ம்ஸ், சிங்கப்பூர்
மருத்துவமனைகளில் இருந்து வந்த சிறப்பு நிபுணர்கள்
கொடுத்த ஆலோசனைப்படி
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயர்ந்தபட்ச தீவிர சிகிச்சையால் அவரது
உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோய்த்
தொற்று ஏற்பட்டு
விடக்கூடாது என்பதால்தான் வெளியாட்கள் யாரையும் ஜெயலலிதாவைப்
பார்க்க அனுமதிக்கவில்லை.
சிகிச்சை அளிக்கும்
மருத்துவர்கள், நர்ஸ்கள், லேப் டெக்னீசியன்கள், உதவியாளார்கள்
கூட மிகுந்த
முன்னெச்சரிக்கையுடன் அதற்கான ஆடைகள்,
கையுறைகள், கால் உறைகள் அணிந்துதான் ஜெயலலிதா
இருக்கும் அறைக்கு
வந்து செல்கிறார்கள்.
ஆளுநர்
வித்யாசாகர் ராவ் வந்தபோதுகூட, மருத்துவக் கட்டுப்பாடுகள்
காரணமாகத்தான் ஜெயலலிதா தங்கி சிகிச்சை எடுத்துக்
கொள்ளும் வார்டை
பார்த்து விட்டுச்
சென்றார். பி.ஜே.பி தலைவர் அமித்
ஷா, காங்கிரஸ்
துணைத் தலைவர்
ராகுல் காந்தி
ஆகியோரும் இந்த
கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் நேரில் பார்க்க முடியாமல்
போனது. இப்போது
பிரதமர் விரும்பினாலும்
அவரும் வந்து
வார்டை பார்த்து
விட்டு, அ.தி.மு.க நிர்வாகிகளிடமும்
மருத்துவர்களிடமும் விசாரித்து விட்டுச்
செல்ல முடியாது.
மேலும், பிரதமரால்
கூட ஜெயலலிதாவைப்
பார்க்க முடியவில்லை
என்று நெகட்டிவ்
செய்திகள் வரும்
சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது என்றுதான் பிரதமர்
வருகை தள்ளி
வைக்கப்பட்டுள்ளது’ என்று சொல்கிறார்கள்.
இதுகுறித்து
மத்திய இணை
அமைச்சர் பொன்.
ராதாகிருஷ்ணன், ‘‘முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக பார்க்கும்
வகையிலான ஏற்பாடுகள்
செய்த பின்னர்,
பிரதமர் மோடி
அப்போலோ வருவதற்கான
வாய்ப்பு இருக்கிறது.
மற்றவர்களைப்போல மருத்துவர்களிடம் மட்டும் முதல்வரின் உடல்நலம்
குறித்து விசாரித்துவிட்டு
பிரதமர் செல்வது
முறையல்ல’ என்றார்.
பி.ஜே.பி மாநில
தலைவர் டாக்டர்
தமிழிசை சவுந்திரராஜன்
கூறுகையில், ‘‘திருப்பூரில் நடந்த கட்சியின் மாநில
செயற்குழு கூட்டத்தில்,
‘முதல்வர் உடல்
நலம் பெற்று
விரைவில் வீடு
திரும்ப வேண்டும்’
என்று தீர்மானம்
போட்டுள்ளோம். பிரதமர் மோடி இப்போதைக்கு அப்போலோ
வரும் திட்டம்
இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்ர். இதனால் பிரதமர் மோடியின்அப்போலோ
வருகை தள்ளி
வைக்கப்பட்டுள்ளது!
0 comments:
Post a Comment