ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் (Adolf Hitler)
பிறந்த வீட்டை இடிக்க அரசு தீர்மானம்
உலக நாடுகளை உலுக்கிய ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லர் Adolf Hitler பிறந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்க ஆஸ்திரியா அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மன் சர்வாதிகாரியாக ஹிட்லர் உயர்ந்தாலும், அவர் அடிப்படையில் ஆஸ்திரியா நாட்டில் தான் பிறந்தவர்.
Upper Austria என்ற மாகாணத்தில் உள்ள Braunau என்ற நகரில் தான் ஹிட்லரின் அடுக்குமாடி வீடு அமைந்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரியா நாட்டு உள்துறை அமைச்சரான Wolfgang Sobotka என்பவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ஹிட்லர் பிறந்த வீடு சுற்றுலா தளமாக மாறியுள்ளது. இங்கு வருபவர்கள் ஹிட்லருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவருடைய நாசிஸ கொள்கைகள் குறித்து நினைவுக்கொள்கின்றனர்.
உலகை உலுக்கிய ஹிட்லரின் நாசிஸ கொள்கைகளை அவருடைய வீடு மூலம் நினைவுப்படுத்தி வருவது நல்ல விடயம் அல்ல.
எனவே, ஹிட்லரின் வீட்டை இடித்து விட்டு அங்கு ஒரு அரசு அலுவலக கட்டிடத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும், இறுதி உத்தரவு விரைவில் வெளியாகும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment