பொது மக்களின் அஞ்சலிக்காக
நடிகை கவீஷா அயேஷானியின் சடலம்
வாகன விபத்தில் உயிரிழந்த நடிகை கவீஷா அயேஷானியின் சடலம் தற்போது தனியார் மலர்சாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இறுதிக்கிரியைகள் நாளை மறுநாள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் உயிரிழந்த நடிகை கவிஷாவின் உடலுக்கு கலைஞர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டென்லி திலக்கரட்ன மாவத்தைக்கு எதிரில் ஜூப்ளி கணுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment