நான் உங்கள் அம்மா பேசுகிறேன்:
வைரலாகும் வாட்ஸ் ஆப் ஓடியோ!
முதலமைச்சர் ஜெயலலிதா தான் நலமாக உள்ளதாகவும், வீண் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் கூறியது போல வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், தற்போது முதலமைச்சர்ர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து பேசுவது போல ஒரு ஓடியோ வெளியாகியுள்ளது.
அதில், நான் உங்கள் அன்பு அம்மா ஜெயலலிதா பேசுகிறேன். என் உடல்நலம் கருதி, எனக்காக மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பிற்கு மட்டும் சொந்தமாகிய என்னை கடவுள் நல்ல உடல்நலத்துடனே வைத்திருக்கிறார். சிறிது ஓய்வெடுத்தபிறகு, உங்கள் முன்னால் தோன்றி, விளக்கம் அளிக்கக்கூடிய அளவிற்கு திடமான உடல் நலத்துடன் ஆண்டவன் எனக்கு ஆசீர்வாதம் அளித்திருக்கிறார்.
ஆக, தேவையில்லாத வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க.வின் அசுரவளர்ச்சி, அரசின் அமைதியான ஆட்சி நடத்தை இவை எல்லாம் சூட்சமக்காரர்களுக்கு வேதனைத்தர, எனது சாதாரண உடல்நலக்குறைவு அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஆகவே, இதுபோன்ற நாகரிகமில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள்.
கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதமும், இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளின் அன்பும் எனக்கு இருக்கும்போது உங்களைவிட்டு என்னை யாராலும் பிரிக்க முடியாது.
நான் ஏற்கனவே சொன்னதுபோல், 'உங்களுக்காகவே நான் - உங்களாலேயே நான்" எனவே, சட்டசபை தேர்தலில் எப்படி அ.தி.மு.க.வை வெற்றியடையச் செய்தீர்களோ.., அதேபோல், வருகிற அக்டோபர் மாதம் 19-ம் திகதி, 17-ம் திகதி அன்று நடைபெற இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலிலும், இரட்டை இலை சின்னத்திற்கு உங்கள் மேலான வாக்குகளைதந்து, பெருவாரியான வெற்றிகளை தரவேண்டும் என்று கேட்டு, வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தற்போது முதல்வர் குறித்து வீண்வதந்திகள் பரவி வரும் நிலையில், தனது உடல் நலம் குறித்து முதல்வர் ஜெயலலிதா பேசியிருப்பது அவர் தானா, அல்லது வேறு யாரும் செய்த வேலையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
https://youtu.be/KcVZVWRhYbc
0 comments:
Post a Comment