தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பார்வையிட
இந்தியப் பிரதமர் மோடி நாளை அப்போலோ வருகிறார்?
நாளை (அக்டோபர் 18-ம் திகதி) அப்போலோ மருத்துவமனைக்கு பிரதமர்
மோடி செல்ல உள்ளதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 22-ம் திகதி அப்போலோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. அப்போலோ மருத்துவமனை டாக்டர்களுடன்
சேர்ந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்ட்
பியேல், எய்ம்ஸ் டாக்டர்கள் கில்மானி,
நிதிஷ் நாயக், அஞ்சன் டிரிக்கா,
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் டாக்டர்கள்
கொண்ட குழு, தொடர்ந்து ஜெயலலிதாவின்
உடல்நிலையை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில்,
அப்போலோ மருத்துவமனைக்கு இந்தியா முழுவதும் இருந்து
அரசியல் தலைவர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். அகில
இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி,
பி.ஜே.பி-ன்
தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய
நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, கேரள முதலமைச்சர் பினராயி
விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் சென்றனர்.
அதுபோல,
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்
தலைவர்களில், விஜயகாந்த் தவிர மற்ற அனைத்துக்
கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அப்போலோ
மருத்துவமனைக்கு சென்று விட்டனர். ஆனால்,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு 25 நாட்கள்
கடந்துவிட்டநிலையில், இந்தியப் பிரதமர் மோடி நேரில்
சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி இன்னும் விசாரிக்கவில்லை.
இத்தனைக்கும்
மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் அரசியல் கூட்டணி தவிர்த்து
தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உண்டு.
மோடி குஜராத் முதல்வராக பதவியேற்றபோது,
ஜெயலலிதா நேரில் போய் அந்த
விழாவில் கலந்து கொண்டார். அதுபோல,
இரண்டுமுறை போயஸ் கார்டன் வீட்டுக்கு
வந்து மோடி விருந்து சாப்பிட்டுச்
சென்றுள்ளார். இந்த நிலையில், பிரதமர்
மோடி நேரில் சென்று ஜெயலலிதாவின்
உடல்நிலையை விசாரிக்காதது, நிறைய விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இவை
அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாளை (அக்டோபர் 18-ம்
திகதி) அப்போலோ மருத்துவமனைக்கு
பிரதமர் மோடி செல்ல உள்ளதாக
கார்டன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதை
உறுதி செய்வதுபோல, பழைய விமான நிலையத்தில்,
வி.ஐ.பி விமானங்கள்
தரையிறங்கும் பகுதி ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
தற்போது தீவிரமாக நடைபெற்றுவருவதாக
அறிவிக்கப்படுகின்றது.
ராகுலின்
வருகை, தமிழக அரசியலில் பல
கணக்குகளை மாற்றிப்போட்டதுபோல், பிரதமர் மோடியின் வருகையும்
பல அரசியல் கணக்குகளை புதிதாக
எழுதும் என பலராலும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment