மின்வெட்டு நேர அளவில் மாற்றம்


மின்வெட்டு நேர அளவில் மாற்றம்



இலங்கை மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்த மின்வெட்டு அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் காலை 8 மணி முதல் ஒரு மணித்தியாலம் மற்றும் மாலை 6 மணிக்கு பிறகு 30 நிமிடம்  மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்திக்காக மகாவலி அதிகார சபை மேலதிக நீரை வழங்க உடன்பட்டிருப்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மூன்றரை மணி நேர மின் வெட்டு ஒன்றரை மணி நேரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை, நாடாளாவிய ரீதியில் காலை 8 மணி முதல் இரண்டரை மணித்தியாலங்கள் மற்றும் மாலை 6 மணிக்கு பிறகு ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு இன்று காலையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய கொள்ளளவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் கருவிகள் செயலிழந்து போயிருந்தன.
தானியங்கி நிறுத்தல் கருவிகளின் திடீர் செயற்பாடு காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நீராவி கடத்தப்படும குழாய் உள்ளிட்ட முக்கிய உற்பத்தித் தொகுதி பழுதடைந்துள்ளது.
இதனை சீரமைக்க சில நாட்கள் செல்லும் என்று கருதப்படுகின்றது. இதன் காரணமாக நாளாந்த மின்பாவனைக்கு நுரைச்சோலையில் இருந்து வழங்கப்பட்ட 300 மெகாவொட் மின்சாரத்தின் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்வெட்டு தவிர வேறு வழியே இல்லாத நெருக்கடிக்கு மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top