விளையாட்டை மேம்படுத்தி நாட்டில்
சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
சமாதானம், சகோதரத்துவம், மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி மனங்களை சுகப்படுத்தும் உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு பாடுபடுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
விளையாட்டு மைதானமென்பது இன, மத, சாதி, மாகாண பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணையக்கூடிய இடமாகுமெனதெரிவித்த ஜனாதிபதி, ஒழுக்கமற்ற சமூகத்தை ஒழுக்கமான சமூகமாக மாற்றும் விளையாட்டு மைதானம், தனிநபர்களிடம் ஒழுக்கத்தையும், பண்பையும் உருவாக்குவதாகவும் குறிப்பிட்டார்.
இன்று எமது நாட்டுக்கும் , முழு உலகுக்கும் ஒழுக்க விழுமியம் கட்டாயமான தேவையாக உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஒழுக்க விழுமியங்கள் இல்லாத்தால் உலகில் யுத்தம் நடைபெறுவதாகவும், யுத்தம் இல்லாதொழிந்து சமாதானம் உருவாக வேண்டுமென்றால் முழு உலகிலும் ஒழுக்கநெறி பின்பற்றபட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இம்முறை தேசிய விளையாட்டு விழாவுக்காக நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 800 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் திறமைகளைக் காட்டியோருக்கு வெற்றிக்கேடயங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.
வடக்கு மாகாண முதலமைச்சா சீ.வீ. விக்னேஸ்வரன்.ஆளுனர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், விளையாட்டுத்துறை அமைச்சா தயாசிறி ஜயசேகர. இராஜாங்க அமைச்சா விஜயகலா மகேஸ்வரன் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இம்முறை
தேசிய விளையாட்டு
விழாவுக்காக நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி
800 வீர, வீராங்கனைகள்
பங்குபற்றியதுடன் திறமைகளைக் காட்டியோருக்கு வெற்றிக்கேடயங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment