மேன்முறையீட்டு
நீதிமன்ற நீதிபதி
ஏ.எச்.எம்.டி
நவாஸிடம் விசாரணை
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸிடம்
விசாரணை நடத்தப்பட்டுள்ளது.லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவினால் இந்த விசாரணை
நடத்தப்பட்டுள்ளது.
நீதிபதி நவாஸ், சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக
கடமையாற்றிய காலத்தில், செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில் ஆரம்ப விசாரணை நடத்தி வழக்குத்
தொடர்ந்த விதம் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு
ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள்
நடத்தப்பட்டுள்ளன.நவாஸின் கீழ் கடமையாற்றிய சிரேஸ்ட சட்டத்தரணிகள் சிலரிடமும்
விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே நீதிபதி நவாஸிடம் விசாரணை
நடத்தி வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ, நவாஸிற்கு
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவியை வழங்கியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment