விலை மதிக்க முடியாத சங்குகளை இந்தியாவுக்கு

எடுத்துச் செல்ல முயற்சித்த இந்திய பிரஜை கைது!

விலை மதிக்க முடியாத சங்குகள், பெறுமதியான சிப்பிகளை சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டுச் செல்வதற்காக இன்று காலை 7.45 அளவில் விமான நிலையத்திற்கு வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் விலை மதிக்க முடியாத 60 சங்குகள், பல்வேறு வகையான 305 அழகிய சிப்பிகளை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
மீன்பிடி மற்றும் நீரியல் வள சட்டம் வனஜீவராசிகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் இவ்வாறான அரிய வகை உயிரினங்களுடன் தொடர்புடைய பொருட்களை இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லவும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை, தங்காலை உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மிகவும் சிரமப்பட்டு இந்த சங்குகளையும் சிப்பிகளையும் சேகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மீன்பிடி தொழிலுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், இந்த சங்குகளை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முடியுமா என்று ஆராய்ந்து பார்க்க தான் இலங்கை வந்ததாக இந்திய பிரஜை சுங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.


எவ்வாறாயினும் இந்த சங்குகளும் சிப்பிகளுக்கு இலங்கைக்கே உரிய உயிரினங்களுடையது என்பதால், விசாரணைகளில் பின்னர் சுங்க அரும்பொருட் காட்சிசாலையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கவுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top