Sainthamaruthu Shoora Council
சாய்ந்தமருது வைத்திய சாலை தொடர்பாக சூறா சபையின் அறிக்கை
சாய்ந்தமருது
வைத்திய சாலையின் குறைபாடுகள் தொடர்பாக அண்மையில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்களின் உண்மைத்தன்மையை
சாய்ந்தமருது சூறா சபை ஆராய்ந்து
சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியது
வைத்தியசாலையில்
தற்போது காணப்படும் குறைகளும் தேவைகளும் பின்வருவன:
சில
பதவிகளுக்கான சேவையாளர் பற்றாக்குறை.
தீவிர
சிகிச்சைப் பகுதி, எக்ஸ்றே பகுதி,
பல் சிகிச்சை கிளினிக்,சத்திர சிகிச்சை அறை,
ஆய்வு கூடம், ஸ்கேன் அறை
ஆகியவற்றிற்கு குளிரூட்டப்பட்டு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட
வேண்டும்
வைத்தியசாலையில்
பூரணமான பராமரிப்பு வேலைகளும் திருத்த வேலைகளும் அவசியமாகவுள்ளது.
அம்புலன்ஸ்
பழுதடைந்துள்ளது. புதியது அவசியம். கராஜ்
தேவை
வைத்திய
சாலைத் தளபாடங்களும் காரியாலத் தளபாடங்களும் புதிதாகத் தேவை
மருந்து
மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடுகள்; சீராக்கப்பட வேண்டும்
விசேட
வைத்திய நிபுணர்கள் வருகை அதிகரிக்கப்பட வேண்டும்.
எனினும்
,இவ்வைத்தியசாலையில் பின் வரும் சேவைகளை
திருப்திகரமாக சராசரி தொகை நோயாளர்கள்
பெற்று வருகின்றனர்;
வெளி
நோயாளர் சிகிச்சை
சிறு
சத்திர சிகிச்சைகள்
கிளினிக்குகள்
(தொற்றா நோய்கள், பிரசவ தாய்மார்,குழந்தைகள்,தடுப்பூசி,மன நோய், குடும்பக்
கட்டுப்பாடு )
பல்.
சிகிச்சை
தீவிர
சிகச்சைப் பகுதியில் கவனிப்பு
ஆய்வு
கூடச் சேவைகள்
கர்ப்பிணித்
தாய்மார் ஸ்கேன்
ஈ.சி.ஜி
ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான
விடுதிகள்
மருத்துவப்
பரிசோதனைகள், சான்றிதழ்கள் வழங்குதல்
மேற்படி
குறைகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்ய வைத்திய சாலை
நிர்வாகமும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு
வருகின்றன. அம்முயற்சிகளின் பலனாக சில நிதி
ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி வேலைகள்
நடைபெறுகின்றன.
ஆயினும்
ஒரு பூரணத்துவமான பராமரிப்பு வேலை திட்டமிடப்பட்டு அதற்கான
நிதி பெறப்படவேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் ,இங்குள்ள
தீவிர சிகிச்சைப் பிரிவு (ETU) மிக
நவீனமாக்கப்பட்டு இங்கு மேலும் சில
விசேட சிகிச்சைப்பிரிவுகள் அமைவதன் மூலம் ,இவ்வைத்திய சாலையை மீண்டும் மக்கள்
மத்தியில் முக்கியத்துவம் பெறவைக்கலாம்.
மேலும்
பொது மக்களின் அக்கறை, நம்பிக்கை, பொறுமை
என்பன இவ்வைத்திய
சாலையின் அபிவிருத்திக்கும் சிறந்த சேவைக்கும் மிக
அவசியமாகவுள்ளது,
எனவே
எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலை
தொடர்பாக மக்களுக்கு பல அறிவூட்டல் நிகழ்வுகள்
அவசியமாகவுள்ளது. இதற்கு
வசதி வாய்ப்புள்ள நிறுவனங்களின் ஆதரவு அவசியமாகவுள்ளது.
டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல்
தலைவர்
சாய்ந்தமருது
சூறா சபை
0 comments:
Post a Comment