அமைச்சர் வருவதற்கு முன் பஸ் நிலையத்தை
திறந்துவைத்த பாராளுமன்ற உறுப்பினர்
குறுக்காக அமர்ந்து கோஷமிட்டதால் பதற்றம்

அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் மொரகஹாஹேன பிரதேசத்தில் புதிய பஸ் நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்படவிருந்தது.

இவ்வாறான நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க சிலருடன் சென்று ரிபன்னை வெட்டி பஸ் நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

மொரகஹாஹேன புதிய பஸ் நிலையம் இன்று முற்பகல் 9.30 அளவில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால்  திறக்கப்படவிருந்தது. எனினும் அது 8.15 அளவில் முன் கூட்டியே பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவினால்  திறந்து வைக்கப்பட்டது.
பஸ் நிலையத்தை திறந்து வைத்து விட்டு அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய விதுர விக்ரமநாயக்க,

மொரகஹாஹேன எனது சொந்த ஊர். இங்கு வந்து எவருக்கும் சண்டித்தனம் செய்ய முடியாது. இங்கு நாங்கள் தான் வேலை செய்வோம். அன்றும் நாங்களே வேலை செய்தோம். இன்றும் நாங்களே வேலை செய்வோம்எனக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் பஸ் நிலையத்தை திறந்து வைக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அங்கு சென்றார். அமைச்சர் சென்றதும் அங்கு சற்று பதற்றமான நிலைமை உருவானது.

நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பெருந்தொகையான மக்கள் வீதியின் குறுக்காக அமர்ந்து கோஷமிட்டதால் இந்த பதற்றம் ஏற்பட்டது.
பாதுகாப்புக்காக இங்கிரிய, ஹொரணை, மொரகஹாஹேன உட்பட அருகில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த 150 பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.


அங்கு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ” ஊர் சுற்றும் சண்டியர்களின் எதிர்ப்புகளை நாங்கள் ஐந்து சதத்திற்கும் பொருட்படுத்த மாட்டோம். அப்படி எண்ணிக்கொடிருந்தால், அது தவறு. நாங்கள் இந்த இடத்திற்கு சும்மா வந்துவிடவில்லை. அரச பயங்கரவாத்தை தோற்கடித்தே இந்த இடத்திற்கு வந்தோம்என சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top