இலங்கையிலும் சிவசேனை இயக்கம்

இந்துக்கள் பாதுகாப்புக்காக தொடங்கியதாக அறிவிப்பு



இலங்கையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிவசேனை இயக்கம் இந்துக்கள் பாதுகாப்புக்காக தொடங்கியதாக கட்சி தலைவர் மரவன்புலவு சச்சிதானந்தம் தெவித்துள்ளார்.

இலங்கையில் சிவசேனை இயக்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மரவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சி வவுனியாவில் நடந்தது. அப்போது சச்சிதானந்தம் கூறியதாவது:-

நாங்கள் தொடங்கியுள்ள சிவசேனைக்கும், இந்தியாவில் உள்ள சிவசேனாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் அவர்களுடைய ஆதரவுடன் தான் இந்த அமைப்பை நாங்கள் தொடங்குகிறோம். அதுமட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், கோவாவில் செயல்படும் இந்து ஜன ஜக்ருதி சமீதி ஆகியவற்றுடன் கலந்து பேசி இந்த இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம்.

இலங்கையில் இந்துக்கள் மைனாரிட்டி மக்களாக உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மதமாற்றம் பிரச்சினை பெரிய அளவில் உள்ளது. இந்துக்கள் வசிப்பிடங்கள் புத்தமதத்தினரின் காலனிகளாக மாற்றப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த இயக்கத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்துக்களை பாதுகாப்பது எங்களது முக்கிய குறிக்கோளாக இருக்கும். முஸ்லிம்களுக்கு அரபு நாடு போன்ற நாடுகளில் இருந்து உதவி கிடைக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு வெளிநாட்டு மிஷனரிகளில் இருந்து உதவி கிடைக்கிறது. ஆனால் இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஆதரவுடன் நாங்கள் இந்த இயக்கத்தை இப்போது தொடங்கி இருக்கிறோம். இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் உள்ள இந்துக்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்காக செயல்படுவோம்.வ்வாறு அவர் கூறினார்.


இந்த இயக்கத்தில் இலங்கை தமிழ் எம்.பி. சுமந்திரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top