இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

செங்கம்பள மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டார்

பிராந்திய அமைப்புக்களின் ஒத்துழைப்பில் புதியதோர் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் BRICS-BIMSTEC மாநாட்டின் சமாந்தர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம்மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (15) இரவு UL 171 விமானமூடாக பெங்களுர் விமான நிலையத்தினை சென்றடைந்தார்.
அங்கிருந்து விசேட விமானம் ஊடாக கோவாகடற்படை மத்திய நிலையத்தை சென்றடைந்த  ஜனாதிபதி அவர்கள் செங்கம்பள மரியாதை அணிவகுப்புடன் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
இந்த வரவேற்பு நிகழ்வில் இந்திய அரசின் சார்பாக வெளிவிவகார இராஜாங்கஅமைச்சர் எம்.ஜே.அக்பர், கோவா பிராந்திய அரசின் தொழிலாளர் அமைச்சர் Shri Avertano Furtado ஆகியோர் கலந்துகொண்ட அதேவேளை புதுடில்லிக்கான இலங்கைத் தூதுவர் சித்ராங்கனி வாகீஸ்வர ஆகியோர்உள்ளிட்ட இலங்கைத் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்திய முப்படைகளின் கௌரவ அணிவகுப்பும், பல்வேறு கலாசார நிழக்வுகளும் இந்த வரவேற்பு நிகழ்வினை மேலும் அலங்கரித்தது.
ஜனாதிபதி அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரைக் கொண்டு பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விசேட அழைப்பின்பேரிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அதேவேளை, இம்மாநாட்டில் பங்கேற்கும் சில அரசதலைவர்களுடன் ஜனாதிபதி அவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். 








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top