பாதையைக் கடக்க முற்பட்ட கோழியை
அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

விந்தையை ஏற்படுத்தியிருக்கும் சம்பவம்!!

பிரித்தானியாவில் பரபரப்பான பாதையை கடக்க முற்பட்ட குற்றத்திற்காக கோழி ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் விந்தையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின். Dundee பகுதியில் உள்ள East Marketgait சாலையை கடக்க முற்பட்ட குற்றதிற்காகவே கோழி இவ்வாறு பொலிஸாரல் அதிரடியாக  கைது செய்யப்பட்டுள்ளது.

கோழியால் வாகன சாரதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சாரதி ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார். கோழியை கைது செய்து அருகில் உள்ள Tayside காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பினர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, உரிமையாளர் கிடைக்கும் வரை கோழியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி கோரியுள்ளனர்.


எனினும், கோழி ஏதற்காக பாதையைக் கடக்க முற்பட்டது மற்றும் உரிமையாளர் குறித்தும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top