பாகிஸ்தானிலிருந்து மோடிக்கு வந்த ‛மிரட்டல்'
புறா மூலம் வந்தது கடிதம்!
இந்தைய பிரதமர்
மோடிக்கு மிரட்டல்
கடிதம் எடுத்து
வந்த புறாவை
இராணுவ அதிகாரிகள்
சிறை பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான்
தீவிரவாதிகள் கடந்த 18 ஆம் திகதி உரி
பகுதியில் அமைந்திருந்த
இந்திய இராணுவ
முகாம் மீது
தாக்குதல் நடத்தினர்.
இதன் காரணமாக
19 இந்திய இராணுவ
வீரர்கள் இறந்தனர்.
இதற்கு
தக்க பதிலடி
கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் கடந்த
சில தினங்களுக்கு
முன்னர் பாகிஸ்தான்
தீவிரவாதி முகாம்களில்
தாக்குதல் நடத்தியதில்
38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால்
இந்தியா பாகிஸ்தான்
இடையே சற்று
பதற்றமான சூழ்நிலை
நிலவு வருகிறது.
இதற்கிடையில் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும்
வகையில் நேற்று
இரண்டு மஞ்சள்
நிறம் கொண்ட
பலூன்கள் பஞ்சாப்
மாநிலத்தில் கிடைத்தன.
அதைத்
தொடர்ந்து தற்போது
பிரதமர் மோடிக்கு
பகிஸ்தானில் இருந்து புறா #pigeonthreat
மூலம் மிரட்டல்
தூது வந்துள்ளது.
புறாவின்
காலில் கட்டப்பட்டிருந்த
கடித்தத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற
போரின் போது
தாங்கள் எப்படி
இருந்தோமா, அப்படி தற்போது பாகிஸ்தானியர்கள் இருக்கிறோம் என்று எண்ணவேண்டாம் என்றும்
தங்கள் நாட்டைச்
சேர்ந்த சிறுவர்கள்
கூட உங்கள்
மீது போர்
புரிய தயாராக
உள்ளோம் எனவும்
உருது மொழியில்
எழுதப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்த
சாம்பல் நிறம்
கொண்ட புறா
பஞ்சாப் மாநிலம்
பதன்கோட் அருகே
உள்ளே சிம்பால்
என்னும் இடத்தில்
எல்லை பாதுகாப்பு
படையினரிடம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக தீவிர
விசாரணை மேற்கொண்டு
வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
https://youtu.be/R2mBf65edY4
0 comments:
Post a Comment