மின் தடை!.
இன்று தொடக்கம் நடைமுறை
இலங்கையில் 3 மணித்தியால மின்சார தடை
அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
கொழும்பை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று முதல் மின்சார
விநியோகத்தடை அமுலுக்கு வருவதாக மிசாரசபை மேலும் கூறியுள்ளது.
இதன்படி காலை வேளையில் இரண்டரை மணித்தியாலங்களும் இரவில்
ஒரு மணித்தியாலமும் மின்சார தடைப்படும் எனவும்,
காலை 8 மணிமுதல் 10.30 வரைக்கும் இரவு வேளையில் 6 மணிமுதல்
10 மணிக்குள் ஒரு மணித்தியாலமும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
மின்சாரசபை அறிவித்துள்ளது.
ஒருவார காலத்துக்கு இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒருவார காலத்துக்கு இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
.நேற்று முன்தினம் கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில்
மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய
கொள்ளளவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின்
கருவிகள் செயலிழந்து போயிருந்தன.
தானியங்கி நிறுத்தல் கருவிகளின் திடீர் செயற்பாடு காரணமாக
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நீராவி கடத்தப்படும குழாய் உள்ளிட்ட முக்கிய
உற்பத்தித் தொகுதி பழுதடைந்துள்ளது.
இதனை சீரமைக்க சில நாட்கள் செல்லும் என்று
கருதப்படுகின்றது. இதன் காரணமாக நாளாந்த மின்பாவனைக்கு நுரைச்சோலையில் இருந்து
வழங்கப்பட்ட 300 மெகாவொட் மின்சாரத்தின் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்வெட்டு தவிர வேறு வழியே இல்லாத
நெருக்கடிக்கு மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment