பிரிக்ஸ்
மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி
தவறாக
வழிநடத்தியுள்ளார்
பாகிஸ்தான்
குற்றம்சாட்டு
தீவிரவாதம் தொடர்பான விவகாரத்தில் பிரிக்ஸ் மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர
மோடி தவறாக வழிநடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின்
வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக்
நாடுகளை தவறாக வழிநடத்துகிறது. இந்தியாவின் தலைமை ஜம்மு-காஷ்மீரில் மேற்கொண்டு
வரும் பண்பற்றதன்மையை தீவிரமாக மறைக்க முயற்சிக்கிறது.
காஷ்மீரில் உண்மை அறியும் குழுவை அனுப்ப ஜெனிவாவில் உள்ள
ஐ.நா. மனித உரிமை ஆணையர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச்
செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர்
மோடி, “நமது
பொருளாதாரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தின் தாய்மடியாக இருக்கும்
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்”
என வலியுறுத்தினார்.
0 comments:
Post a Comment