பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றடைந்தார்!



பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முகமாக, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றடைந்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கான இந்தியத் தூதர் வை.கே. சின்ஹாவினால் வரவேற்கப்பட்டனர்.

நாளை காலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதுடன், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இடையிலும் இருதரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இந்தியா பிரதமரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு விருந்துபசார நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் குடியரசுத் தலைவர் உட்பட்ட முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து பேச்சுவார்த்தைகளையும் நிகழ்த்த உள்ளார்.

இதேவேளை, பிரதமருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதிநிதி குழுக்களும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் எடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Arriving in India for a three-day State Visit, I was greeted by H.E. Mr. Y.K Sinha - High Commissioner of India to Sri Lanka, H. E. Madam Chitranganee Wagiswara - High Commissioner of Sri Lanka to India, and State Officials at the Indira Gandhi International Airport this afternoon.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top