ஆதில் பாக்கிர் மாக்காரின் ஜனாஸா
ஜாவத்தை முஸ்லிம்
பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்
தேசிய
ஊடக மத்திய
நிலையத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ்
பாக்கிர் மாக்காரின்
புதல்வன் ஆதில்
பாக்கிர் மாக்காரின்
ஜனாஸா இன்று
மாலை நல்லடக்கம்
செய்யப்பட்டது.
கொழும்பு
ஜாவத்தை முஸ்லிம்
மையவாடியில் இடம்பெற்ற நல்லடக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட
இன, மத
பேதமின்றி பல்லாயிரக்கணக்கான
மக்கள் கலந்துகொண்டனர்.
உயர்
கல்விக்காக கடந்த மாதம் பிரித்தானியா சென்றிருந்த
ஆதில் பாக்கிர்
(வயது26) திடீர்
என ஏற்பட்ட
சுகயீனம் காரணமாக
கடந்த 12ஆம்
திகதி லண்டனில்
காலமானார்.
இந்நிலையில்
இன்று 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அன்னாரின்
ஜனாஸா இலங்கைக்கு
கொண்டுவரப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து கொழும்பு,
இல. 34, புலஸ்
குறுக்குத் தெருவில் உள்ள அன்னாரின் வீட்டில்
வைக்கப்பட்டிருந்த ஜனாஸா, இன்று16
ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் ஜாவத்தை
முஸ்லிம் பள்ளிவாசலில்
தொழுகை நடத்தப்பட்டதன்
பின்னர் ஜாவத்தை
முஸ்லிம் பள்ளிவாசல்
மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா
பயான் அகில
இலங்கை ஜம்
இய்யத்துல் உலமா சபை தலைவர் றிஸ்வி
முப்தி அவர்களினால்
நிகழ்த்தப்பட்டது.
– படங்கள் : அஷ்ரப் ஏ சமத்
0 comments:
Post a Comment