பசிலின் சொந்தமானது எனக்
கூறப்பட்ட காணியை
ஏல விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
கிடைக்கப்பெறும் நிதியை அரச கணக்கில் வைப்பில் இடுமாறும் உத்தரவு
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட, மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணியை ஏல விற்பனை செய்யுமாறு பூகொடை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பூகொட நீதிமன்ற நீதவான் ருவன் பத்திரன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை குறித்த ஏலத்தில் கிடைக்கப்பெறும் நிதியை அரச கணக்கில் வைப்பில் இடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நீதிமன்ற விசாரணையின் போது பசில் ராஜபக்ஸ மல்வானை காணி தன்னுடையது அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment