மூன்று இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு

இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு



உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தற்போது தொடங்கி உள்ளது.

முதலில் மருத்துவ நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னைத்தானே சரிசெய்து மறுசுழற்சி செய்யும் உயிரியல் செல்களின் செயல்முறைகள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அவருக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின் டேவிட் தௌலெஸ், டன்கன் ஹல்டேல் மற்றும் மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top