யுத்த காலத்தில் 2,594 பொலிஸார் உயிரிழப்பு
639 பேர் அங்கவீனம்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க
விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்தின்போது 2,594 பொலிஸார் உயிரிழந்ததுடன், 639 பேர் அங்கவீனமாகியுள்ளனர் என கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்தார். மேலும், பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் 3,211 பொலிஸார் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கைப் பொலிஸ் சேவையின் 153ஆவது பொலிஸ் வீரர்கள் தினத்தையிட்டு, பிரதான நிகழ்வு, மட்டக்களப்பு சிரேஷ்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இன்று 21 ஆம் திகதி இடம்பெற்றது.. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது
பொலிஸ் சேவையில் பல ஆண்டுகள் கடமையாற்றி சிறுசிறு பிரச்சினைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பொலிஸாரை மீண்டும் பணியில் அமர்த்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் 1,500 பொலிஸார் மீண்டும் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
'நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்துக்காக முழுமையான பங்களிப்புடன் பொலிஸார் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரணமாக சூழ்நிலையின் போதும், பொலிஸார் மிகச் சிறப்பாக செயற்பட்டனர்' என்றார்.
0 comments:
Post a Comment