நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்கள்

எதிர்வரும் 28ம் திகதி திறப்பு



நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்துவைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமர் மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 28ம் திகதி நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை ஒரேநாளில் திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் முழுமையாக கணினி மயப்படுத்தி வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் நிர்வாகத்தையும் இலகுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்றுவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top