இலங்கை கல்வி நிருவாக சேவை
திறந்த போட்டிப்பரீட்சை அடிப்படையில்
இரண்டாம் கட்டமாக 37 பேருக்கு நியமனம்
(அஸ்லம்)
இலங்கை
கல்வி நிருவாக
சேவையின் மூன்றாம்
வகுப்பிற்கு திறந்த போட்டிப்பரீட்சை அடிப்படையில் இரண்டாம்
கட்டமாக 37 பேரை அரச சேவை ஆணைக்குழு
நியமனம் செய்வதற்கான
அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இதனடிப்படையில்
ஆறு தமிழ்
பேசும் உத்தியோகத்தர்களும்,
31 சிங்கள மொழி
மூல உத்தியோகத்தர்களும்
தெரிவாகியுள்ளனர். இவர்களுக்கான நியமனம்
இம்மாதம் 15ம் திகதி முதல் வழங்கப்படுகிறது.
ஏ.சி.நுஸ்ரத்
நிலோபரா, எஸ்.அன்பரசி, எம்.எஸ்.என்.முகம்மட், ஏ.பி.ஜோசப்,
ஏ.எச்.முஹம்மட் பாசீல்,
எஸ்.கல்பனா
ஆகியோர் தமிழ்மொழி
மூலம் தெரிவாகியுள்ளனர்.
ஏற்கனவே
முதலாம் கட்டமாக
198 பேர் தெரிவாகியிருந்தனர்.
தற்போது 37 பேர் என மொத்தம் 235 பேர்
தெரிவாகியுள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை
அதிகாரிகள் சங்கச் செயலாளர் ஏ.எல்.முஹம்மட் முக்தார்
தெரிவித்தார்.
ஏப்ரல்
புதுவருட
விடுமுறையின் பின்னர் இலங்கை
கல்வி நிருவாக
சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட
பரீட்சை மூலம்
தெரிவானோருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களது விபரம்
தற்போது அரச
சேவை ஆணைக்குழுவிற்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment