அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகரிக்கப்பட்ட அதிபர் படியை

பாடசாலை அதிபர்களின் தரத்திற்கேற்ப வழங்க வேண்டும்

இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

(அஸ்லம்)


அரச பாடசihலகளின் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகரிக்கப்பட்ட அதிபர் படியை பாடசாலை அதிபர்களின் தரத்திற்கேற்ப வழங்க வேண்டுமென கல்வியமைச்சை இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக மேற்படி சங்கச் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் அதிபர்களுக்கான நிருவாகப்படியை அதிகரித்துள்ளமை குறித்து அமைச்சின் முடிவை வரவேற்கின்றோம்.
தற்போது பாடசாலைகளை பாடசாலைகளின் தரத்தை விட குறைந்த தர அதிபர்களாலும், சில பாடசாலைகளின் தரத்தை விடக்கூடிய தர அதிபர்களாலும் பாடசாலைகள் நிருவகிக்கப்படுகின்றன. அரசியல் தலையீடுகள் காரணமாக தரம் கூடிய அதிபர்களுக்கு பாடசாலைகள் கிடைக்காமல் உள்ளது.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கைப்படி 1 ஏபி தரப்பாடசாலையின் அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை அல்லது இலங்கை அதிபர் சேவை முதலாம் தர உத்தியோகத்தராக இருக்க வேண்டும்.

1 சி தரப்பாடசாலை அதிபராக இலங்கை அதிபர் சேவை முதலாம் தர அல்லது இரண்டாம் தர சிரேஸ்ட உத்தியோகத்தர் இருக்க வேண்டும்.

இரண்டாம் தரப்பாடசாலை அதிபராக அதிபர் சேவை இரண்டாம் தரத்தவரும், மூன்றாம் தரப்பாடசாலை அதிபராக மூன்றாம் தரத்தவரும் அதிபராக இருத்தல் வேண்டும்.

இதற்கு மாற்றமாக தற்போது பாடசாலை அதிபர்கள் அரசியல் செல்வாக்காலும், அதிகாரிகளின் செல்வாக்காலும் நியமிக்கப்பட்டுள்ளனர். சில கல்வி வலயங்களில் கடமை நிறைவேற்று அதிபர்களாக இருந்து மிகை ஊழிய அடிப்படையில் அதிபர் சேவைக்கு நியமிக்கப்பட்டவர்களும் 1 ஏபி, 1 சி தரப்பாடசாலை அதிபர்களாக அரசியல் செல்வாக்கால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, அதிகரிக்கப்பட்ட அதிபர் படி வழங்கப்பட முன்னர் இக்குளறுபடிகள் யாவும் சீர்செய்யப்பட்டு அதிபர்களின் தரம், தகைமைக்கேற்ப பாடசாலை அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக பாடசாலைத்தரம் கவனத்திற்கொள்ளப்படாது அதிபர்களின் தரம் கவனத்திற் கொள்ளப்பட்டு அதிகரிக்கப்பட்ட படி வழங்கப்பட வேண்டும்.  


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top