உயிரியல் தொழில்நுட்ப (Bio-Technology)
புதிய உற்பத்தி பூங்கா ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
உயிரியல்
தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உலகில்
பல அபிவிருத்தி
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே
குறித்த தொழில்நுட்பத்தினை
பயன்படுத்தி தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
வரையறைகளின் கீழ் இனங்காணப்பட்டுள்ள உயிரியல் தொழில்நுட்பம்
(Bio-Technology) புதிய உற்பத்தி பூங்காவொன்றை
ஸ்தாபிப்பதற்கு 2017ம் ஆண்டு
வரவு செலவு
திட்டத்தின் மூலம் 100 மில்லியன் ரூபா நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
ஹோமாகம, பிட்பன
பிரதேசத்தில் அமைந்துள்ள நினிதி தொழில்நுட்பம் மற்றும்
விஞ்ஞான பூங்காவினுள்
அரச – தனியார்
துறையினரின் இணை அனுசரனையுடன் உயிரியல் தொழில்நுட்ப
(Bio-Technology) புதிய உற்பத்தி பூங்கா
ஒன்றினை ஸ்தாபிப்பது
தொடர்பில் விஞ்ஞான,
தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்
பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment