ஹக்கீமுக்கு எதிரான ஹஸனலியின் நிந்தவூர் கூட்டம்

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மட்டுமல்லாது பெரும்பான்மை சமூகம் பெரும்பான்மை கட்சிகள், தேசியம், சர்வதேசம் என எதிர்பார்புடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் சர்வதிகார போக்கிற்கு எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலியினால் நேற்று 03.03.2017 நிந்தவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பரவலாக எலோரும் அறிந்த விடயமாகும்.

பல அரசியல் கெடுபிடிகளுக்கும், நீதி மன்ற தீர்ப்பிற்கும் மத்தியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி பாடலுடன் ஆரம்பாகிய குறித்த பொதுக் கூட்டமானது எதிர்பார்ப்பிற்கு அப்பால் பல்லாயிரக்கணகான போராளிகள் மத்தியில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டமையானது ஹசன் அலிக்கும், முஸ்லிம் காங்கிரசின் தலைமை ரவூப் ஹக்கீமிற்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கும் கிடைத்த  மாபெரும் வெற்றியாகவே எல்லோராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

குறித்த பொதுக்கூட்டத்திற்கு மிக முக்கியமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களாகவும் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்களான சட்டத்தரணி அன்சில் மற்றும் தாஹிர் ஆகியோர்களுடன் பிரதேச சபைகளின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை வழி நடாத்தி செல்லும் சமூகத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து மேடையில் வீட்டிருந்தமையானது ஹசன் அலிக்கும், அதிதிருப்தியாளர்களுக்கும் கிடைத்த இன்னுமொரு வெற்றியாக பார்க்கப்படுகின்றது.
கூட்டத்தில் பேசியவர்கள் விரிவாக ஹக்கீம் அவர்களின் சர்வதிகார போக்கை கூறினார்கள்
இறுதியாக ஹசன் அலி தலைவர் திருந்த வேண்டும் என்று பேசிய போது…
*ஹக்கிமை தலைமையிலிருந்து விரட்ட வேண்டும்
*ஹக்கிமை தலைமையை  ஏற்றுக் கொள்ள முடியாது
*ஹக்கிமை திருத்த அவர் என்ன மனைவியா? அல்லது கணவனா?
*ஹக்கிம் தலைவர்  என்றால் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டாம்
*அஸ்ரப்பின் கொள்கை என்றால் றிசாத் அவர்களுடன் இனைந்து கொள்ளுங்கள்
*ஹக்கிமை  தலைவர் என்று பேச வேண்டாம்
*ஹக்கிமை இந்த பகுதிக்குள் வர அனுமதிக்க முடியாது
என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோஷம் எழுப்பினர் என அறிவிக்கப்படுகின்றது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top