அரச சேவை ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்கமைய

மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை கல்வி வலயங்களுக்கு

மீண்டும் விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.

(அஸ்லம்)


கிழக்கு மாகாணத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனங்களை வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனரால் கோரப்பட்ட தெளிவுபடுத்தலுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள தெளிவுபடுத்தலுக்கமைய மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களுக்கான வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பம் கோரப்படல் வேண்டுமென இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம், கிழக்கு மாகாண ஆளுனரைக் கோரியுள்ளது.

இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் செயலாளர் .எல்.முஹம்மட் முக்தாரினால் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

வலயக்கல்விப் பணிப்பாளர் பதவி இலங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் வகுப்பிற்கான பதவி எனவும், இப்பதவிக்கு மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட முடியாதெனவும், இது தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் இலங்கை கல்வி நிருவாக சேவை பிரமாணக்குறிப்பு என்பவற்றின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் இல்லையெனின் இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் மூலம் அப்பதவி நிரப்பப்பட வேண்டுமெனவும் அரச சேவை ஆணைக்குழு 20.02.2017ம் திகதிய கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவை இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கையில் சம்மாந்துறை, மட்டக்களப்பு மத்திய கல்வி வலயங்களுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர்களாக ஊழஎநசரி னரவல அடிப்படையில் இலங்கை கல்வி நிருவாக சேவை மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவ்வாறு இவர்களை தொடர்ந்து கடமையாற்ற அனுமதிப்பது அரச சேவை ஆணைக்குழு தங்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு முரணானது மட்டுமன்றி இவர்களைக் கடமையாற்ற அனுமதிப்பது இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமையை மீறும் விடயமாகும்.

எனவே, உடனடியாக மேற்குறித்த இரு வலயங்களுக்கும் தகுதியான சேவைத்தரம் கூடிய இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கும் விதத்தில் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு : அரச சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் இணைக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top