பிரித்தானியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்!
பிரித்தானியாவின்
பாராளுமன்ற வளாகத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட
மர்ம நபர்
மீது பொலிசார்
மேற்கொண்ட துப்பாக்கிச்
சூட்டில் அவர்
உயிரிழந்துள்ளார்.
இதே
வேளை லண்டனில்
நடந்த இந்த
தாக்குதலின் போது ஒரு பொலிசார் உட்பட
இரண்டு பேர்
பலியாகியுள்ளனர்.
இதற்கு
முன் இரண்டு
பேர் பலியாகி
இருந்த நிலையில்
எண்ணிக்கை நான்காக
உயர்ந்துள்ளது. குறித்த தாக்குதல் நடத்திய நபர்
தீவிரவாதியாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்
தாக்குதல் நடத்திய
நபர் முதலில்
காரில் வந்ததாகவும்,
அப்போது அருகே
இருந்த பாலத்தில்
விபத்தை ஏற்படுத்திவிட்டு,
பாராளுமன்றத்தின் அருகே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த
மோதலில் பலர்
படுகாயமடைந்ததாகவும், அவர்கள் உடனடியாக
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது
அந்த கார்
விபத்தில் மூன்று
பிரான்ஸ் மாணவர்கள்
சிக்கிக் கொண்டதாக
கூறப்படுகிறது. இதில் இரண்டு பேரின் நிலைமை
மிகவும் கவலைக்கிடமாக
உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள்
வயது 15 முதல்
16 வயது வரை
இருக்கும் என்றும்
கடந்த ஞாயிறு
அன்று தான்
லண்டன் வந்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஒரு
பாடசாலை மாணவர் காரின் மேற்கூரையில்
பலத்த காயங்களுடன்
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்டுகிறது.
மாணவர்கள்
பிரான்சில் உள்ள கான்கேர்னயூவில் உள்ள பாடசாலையில்
படித்து வருவதாக
கூறப்படுகிறது.
பிரிட்டன்
மக்கள் எவ்வளவு
கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பதை தன்னால் அறிய
முடிகிறது என்றும்,
இந்த சம்பவத்தால்
பிரான்ஸ் மக்கள்
யாரேனும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்களா
என்பது குறித்து
கேட்டறிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment