வறுமையினை ஒழிப்பதற்காக வேண்டி
'கிராமிய சக்தி' வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
அரசாங்கங்களின்
பல்வேறு நடவடிக்கைகளினால்
1990ம் ஆண்டு
26.1% ஆக இருந்த
வறுமை மட்டமானது
2011ம் ஆண்டளவில்
6.7% ஆக குறைந்தது.
2017ம் ஆண்டினை
'இலங்கையினை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும்'
ஆண்டாக பிரகடனப்படுத்தி
பிரதேச மட்டத்தில்
மேலும் வறுமை
ஒழிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.
அதனடிப்படையில்,
செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2017ம் ஆண்டில் பிரதேச
செயலக மட்டத்தில்
வறுமை கோட்டிற்கு
கீழ் வசிக்கும்
700 கிராம சேவகர்
பிரிவுகளை இனங்கண்டு,
அக்கிராம சேவக
பிரிவுகளில் வசிக்கும் 80 சதவீதத்தினர் கலந்துகொள்ளும் மகா
சபை மற்றும்
மேற்பார்வை குழுவினை உள்ளடக்கிய நிர்வனம் ஒன்று
ஸ்தாபிக்கப்பட உள்ளது.
அவர்களுக்கு
பயிற்சிகள் அளிக்கப்பட்டு கிராமத்தில் வறுமையினை ஒழிப்பதற்காக
அபிவிருத்தி நிதியுதவி செய்து கொடுக்கப்படவுள்ளது. 2017ம் ஆண்டின்
இறுதியில் அனைத்து
கிராம அபிவிருத்திக்கும்
ஒரு மில்லியன்
ரூபா வீதம்
வழங்குவதற்கு ஏதுவான முறையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேலும்,
உற்பத்தி கிராமங்களாக
விருத்தி செய்வதற்கு
உகந்த 300 கிராம
சேவையாளர் பிரிவுகளை
தெரிவு செய்து,
ஏற்றுமதி செய்வதற்கு
உக்நத உற்பத்திகள்
அல்லது தேசிய
தேவையினை பூர்த்தி
செய்வதன் மூலம்
இறக்குமதியினை குறைக்கும் உற்பத்திகளை விருத்தி செய்வதற்கு
தேவையான தொழில்நுட்ப
மற்றும் நிதி
வசதிகளை பெற்றுக்
கொடுத்து புதிய
வேலை வாய்ப்புக்களை
உருவாக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில் இவ் கிராமிய
சக்தி வேலைத்திட்டத்தை
அரச, தனியார்
மற்றும் பொதுமக்களின்
பங்குபற்றலுடன் செயற்படுத்துவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment