நீரை சுத்திகரிப்பு செய்து, தூய்மையான
குடிநீராக மாற்றும் நவீன வசதி
ஜனாதிபதி பார்வையிட்டார்
நீரை
சுத்திகரிப்பு செய்து, தூய்மையான குடிநீராக மாற்றும்
நவீன வசதிகளுடைய
புதிய நீர்
சுத்திகரிப்பு கருவியை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நேற்று (21) முற்பகல்
ஜனாதிபதி செயலகத்தில்
நடைபெற்றது.
BRJW தனியார் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கருவி
மூலம் எவ்வாறான
நிலையிலுள்ள அசுத்த நீரையும் சில கணப்பொழுதில்
தூய குடிநீராக
மாற்றக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த
கருவி பிரித்தானியாவிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்டதாகும்.
குறித்த
கருவியை ஜனாதிபதி
அவர்கள் பார்வையிட்டார்.
அமைச்சர்களான
ரிஷாட் பதியுதீன் ரவி கருணாநாயக்க, , அனுர
பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த
அமரவீர ஆகியோரும்,
BRJW தனியார் நிறுவனத்தின் தலைவர் டரின் வீரசிங்க
உள்ளிட்ட பிரதிநிதிகளும்
இதில் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment