தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து
கல்முனையில் கலந்துரையாடல்
கல்முனை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும், தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கிலும் நேற்று (04) கல்முனையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கல்முனை தமிழ் மக்களுக்கு நிர்வாக ரீதியிலும், அபிவிருத்தி ரீதியிலும் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. தொடர்ந்து இவ்விடயங்களை பேசுவது மாத்திரமின்றி, இவற்றுக்கான தீர்வுகளை பேச்சுவார்த்தை மூலம் பெற்றுக்கொடுக்க இணக்கம் காணப்பட்டது.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகரசபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment