நிந்தவூரில் நீயா? நானா?
ஹஸனலியின் கூட்டத்திற்குப் பின்னர் ஹக்கீமின் கூட்டம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் சர்வதிகார போக்கிற்கு
எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலியினால் நேற்று முன் தினம்
03.03.2017 நிந்தவூரில் பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பரவலாக எலோரும்
அறிந்த விடயமாகும்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிந்தவூர் கிளையின் கூட்டமும், நிந்தவூர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜப்பார் அலி தலைமையில் நேற்று சனிக்கிழமை (04) நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், உயர்பீட உறுப்பினர்களான பளீல் பி.ஏ, உள்ளிட்ட ஊர் மக்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment