தொடர்மாடி வீடுகளுக்கு தபால் வசதிகளைப்
பெற்றுக் கொடுப்பதற்காக கீழ் மாடியில்
தபால் பெட்டிகளை நிர்மாணிப்பதனை கட்டாயப்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
தொடர்மாடி
வீடுகளில் காணப்படும்
தபால் சேவை
குறைப்பாட்டை நிவர்த்திக்கும் நோக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற
தொடர்மாடி வீடுகளுக்கு
தபால் வசதிகளைப்
பெற்றுக் கொடுப்பதற்காக
தொடர்மாடி வீடுகளை
நிர்மாணிக்கும் போது கீழ் மாடியில் தபால்
பெட்டிகளை நிர்மாணிப்பதனை
கட்டாயப்படுத்துவதற்கும், அவற்றை நிர்மாணித்து
அவற்றை வீட்டின்
இலக்கத்தின் கீழ் இலக்கமிட்டு வைத்திருப்பதற்கும், தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள
தொடர்மாடி வீடமைப்புத்
திட்டங்களில் இவ்வாறான தபால் பெட்டிகளைக் கொண்ட
பிரதேசமொன்று இன்மைக் காரணமாக அவ்வாறான தொடர்மாடி
வீடமைப்புத் திட்டங்களில் தபால் பெட்டிகளைக் கொண்ட
பிரதேசமொன்றை கீழ் மாடியில் தாபிப்பதற்கும், குறித்த
பெட்டிகளின் திறப்புகளை குறித்த வீட்டு உரிமையாளர்களுக்குப்
பெற்றுக் கொடுப்பதற்கும்
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார
சபை, வீடமைப்பு
அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சம்பந்தப்பட்ட
உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு குறித்த
அமைச்சுக்கு அறிவுறுத்துவதற்கும் குறித்த
நிர்மாணத்தை மேற்கொள்ளும் போது குறித்த நிர்மாணத்துக்காகவும்
அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கும் தபால், தபால்
சேவைகள் மற்றும்
முஸ்லிம் சமய
அலுவல்கள் அமைச்சர்
எம்.எச்.எம். ஹலீம்
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment