நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை
திருத்தம் செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
கட்டாக்காலி நாய்களின் பிரச்சினை நாளுக்கு நாள் வலுப்பெற்று செல்வதால், குறித்த பிரச்சினைக்கு தீர்வாக பொது இடங்களில் நாய்களை விட்டுச் செல்லும் குற்றத்திற்கு எதிராக குற்றவாளியாகும் ஒருவருக்கு ரூ. 25,000 இற்கும் மேற்படாத அல்லது 02 வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளையும் விதிப்பதற்கு ஏதுவான முறையில் 1901ம் ஆண்டு
25ம் இலக்க நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்தஞ் செய்வதற்காக சட்ட வரைபை மேற்கொள்வதற்காக சட்ட வரைஞரிடம் ஆலோசனை வழங்குவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment